எவ்வலவு அசதி வாய்ப்புக்கள் இருக்குது!.. அதெல்லாம் பணம் மட்டுமே உள்ள மனம் இல்லாத மனுசங்களுக்கே!.. எவ்வளவு கம்பெனிகள் தொழிற்சாலைகள் எல்லாம் உள்ளன..காலை எட்டு மணி முதல் மாலை எட்டு மணி வரை மனுசனை சக்கையாய் பிழிந்து விட்டு வெறும் ஆறாயிரம் கொடுப்பதர்கீ முக்கா அழும்! அந்த ஆராயிரத்திலும் அவன் வீட்டு வாடகை, மளிகை, கரன்ட் பில் , ஸ்கூல் பீஸ் எல்லாம் கொடுத்து ரேசன் அரிசி, பருப்பு, பாமாயில் வாங்கி அரை வயிறு சாப்பிட்டுவிட்டு 'தீபாவளி பொங்கலுக்கு' சொந்த மண்ணுக்கு சென்று நான் சென்னை மாநகரத்தில் இருக்க்றேனாக்கும்!' என்று காலரை துக்கி விட்டு கொள்வான்,.. ஆனால் அவன் இங்கு ஒண்டு குடித்தனதிலும் பொது டோயலேட்லும் பாத்ரூமிலும் கஷ்டம்!
வெளியில் கிளம்பிவிட்டாள் நிமிடத்தில் கடக்க வேண்டிய இடத்தை கடக்க அரை மணி நேரம் ஆகும்.. அவ்வளவு டிராபிக்.. வண்டியில் போகலாம் என்றால் எதிரில் பக்கதில் வருகிற எல்லாருமே கன்னாபின்னாவென்று தான் வருவார்கள்.. நாம் சரியா போனாலும் நம்ப தலை விதி சரியில்லை என்றால்.. அவ்வளவு தான் .. நம்ப பாடி ஆஸ்பத்திரி மார்ச்சுவரில் தான்!.. அந்த அளவுக்கு மெகா டிராபிக்..
கிராமத்தில் ஒரு சின்னபுள்ள தடுக்கி விழுந்தால் கூட நான்கு மனுசங்க ஓடி வந்து தூக்கிவிடுவார்கள்.. ஆனால்.. சென்னை மாநகரத்தில் ரோட்டில் அடிபட்டு குற்றுயிராய் கிடந்ததால் கூட ஏதோ வேடிக்கை பார்ப்பது போல் பார்த்து செல்வார்கள்!.. குரங்கை பார்த்த மாதிரி போவார்கள்.. அவ்வளவு மனசில இரக்கம்!.. அப்புறம் எப்படி 'சென்னை மாநகரத்திலே மழை பெய்யும்!'.. தண்ணி பஞ்சம் தீரும்!..
சென்னை மாநகரத்தில நேர்மையா உழைச்சு முன்னேரினவன்களை விட குறுக்கு வழியில மேல வந்தவங்க தான் அதிகம்!.. அதாவது பொய் பித்தலாட்டம் ஏமாற்று என்று குறுக்கு வழி!.. ஒரு கவர்மெண்டு ஆஸ்பத்திரி, ஆபிசுக்கு போங்க.. லஞ்சம் இல்லாமல் ஒரு வேலை முடியாது.. கவர்மென்ட் ஆஸ்பத்திரியில ஒவ்வொண்ணுத்துக்கும் காசு!.. அங்க தேடி போற ஏழை பாழைங்க என்ன பண்ணுவாங்க!.. அரசு அலுவலகத்துல ஒரு பிறப்பு சான்றிதழோ இறப்பு சான்றிதழோ வாங்குவதற்கு நான்கு பேரை பார்க்க வேண்டும்!.. அந்த நாலு பேருக்கும் தண்ட செலவு(லஞ்சம்) அழ வேண்டும்!அப்பொழுது தான் நம் வேலை நடக்கும்! என்ன பண்றது! நாமும் இந்த உலகத்துல வாழ வேண்டுமே!
அதே மாதிரி பலசரக்கு கடை, காய்கறி கடை, ஸ்வீட் பேக்கரி என்று எங்கும் அவர்கள் விற்கும் விலை தான்.. ஒரு முருங்கை காய் நான்கு ரூபா என்பான்.. அதே டிபைமென்ட் ஸ்டோரில் எட்டு ரூபா என்பான்.. ஐயோ .. இந்த முருங்கை காயை ஒரு ரூபா கொடுத்து நம்மூரில் வாங்க மாட்டேனே என்று நம்ப கிராமத்துக்காரன் புலம்புவான்!
எல்லாமே கிராமத்தை ஒப்பிடு செய்யும் பொது சென்னை மாநகரத்தில் எல்லாமே தலைகிழ்!..இதற்கு காரணம்.. 'சென்னை' என்று தினமும் பல்வேறு தமிழக மாவட்டத்திலிருந்து மட்டுமில்ல மாநிலங்களில் இருந்து படை எடுத்து கொண்டிருக்கின்றனர்..அப்புறம் இங்கு எப்படி ஒரு ஒழுங்கும் கட்டுப்பாடும் இருக்கும்.. கிராமத்தில் என்றால் ஒருவர் முகம் ஒருவருக்கு நன்கு தெரியும்..நியாய தர்மம் இருக்கும்.. எனவே தில்லுமுல்லு செய்ய அஞ்சுவார்கள்..
ஆனால்..'சென்னை மாநகரத்தில் 'அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் முகம் தெரியாது.. எனவே சுயநலம் மலிந்து விட்டது.. தான் நன்றாக இருந்தால் போதும்.. மற்றவர்கள் எப்படி போனாலும் பரவாயில்லை..எல்லாம் சுயநலம்..!!
No comments:
Post a Comment